தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு | கரூர் செய்திகள் | Dinamalar
தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
13:21

கரூர்: கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகம், பிள்ளபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களை பார்வையிட்டு, ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடத்தினையும் ஆய்வு செய்தார். கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் அரசு வகுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என, அறிவுறுத்தினார். ஆர்.டி.ஓ., தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X