அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
13:26

கரூர்: அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். கரூர் பஸ் ஸ்டாண்ட், ஜவகர் பஜார், வெங்கமேடு பகுதிகளில் உள்ள டீக்கடைகள், பேக்கரிகள் மற்றும் உணவகங்களில், உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி, தொழிலாளர் நல உதவி ஆணையர் கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 55க்கும் மேற்பட்ட கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில், 6 டீக்கடைகளில், 10 கிலோவிற்கும் மேற்பட்ட கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், 12 டீக்கடைகள் மற்றும் உணவகங்களில், பஜ்ஜி, போண்டா போன்ற பலகாரங்களை பரிமாறுவதற்கு செய்தித்தாள்களை பயன்படுத்தியது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டு வாழை இலைகளை பயன்படுத்திட அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய, 18 உணவு வணிகர்களுக்கு, 54 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அசைவ உணவகங்களில் பயன்படுத்தப்படும் இறைச்சிகளின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொழிலாளர் நலத்துறையினர் சார்பில், 16 நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நான்கு முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் புகாரினை, உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ் ஆப் புகார் எண் -94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X