3 குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
20:27

வேலுார்:வேலுாரில், குடும்ப தகராறில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தாய் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



வேலுார் மாவட்டம், வேலுார் சலவன்பேட்டை ஆனகுளத்தம்மன் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார், 30. வீடுகளுக்கு டைல் ஒட்டும் தொழிலாளி. இவர் மனைவி ஜீவிதா, 26. இவர்களுக்கு அட்சயா, 6, என்ற மகளும், நந்தகுமார், 5, என்ற மகனும், பெயர் வைக்காத ஆறு மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.



சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடித்து விட்டு தினேஷ்குமார் வீட்டுக்கு வந்தார். இதை தட்டிக் கேட்ட ஜீவிதாவுக்கு அடி உதை கிடைத்து வந்தது. இதனால் அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்தது. அடிக்கடி அக்கம் பக்கத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர்.இந்நிலையில், இன்று மாலை வரை அவர் வீட்டு கதவு திறக்காமல் இருந்தது. அங்கிருந்தவர்கள் சந்தேகமடைந்து வேலுார் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



போலீசார் கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளே சென்று பார்த்தனர். அங்குள்ள ஒரு அறையில் இருந்த மின் விசிறியில் ஜீவிதா துாக்கிட்டு பிணமாக கிடந்தார்.அருகில் மூன்று குழந்தைகள் இறந்து கிடந்தனர்.

நான்கு உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அதில், குடும்ப தகராறில் விரக்தியடைந்த ஜீவிதா மூன்று குழந்தைகளின் கழுத்தை சேலையால் நெரித்து கொலை செய்து விட்டு, அவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தலைமறைவான தினேஷ்குமாரை தேடி வருகின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X