கரூரில் காலாவதியான கூல்டிரிங்ஸ்:கண்டுகொள்ளுமா ? கரூர் மாவட்ட நிர்வாகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
21:39

கரூரில் , காலவதியான கூல்டிரிங்ஸ் குடித்து சிறுமி ஒருவர் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலை தற்போது மாவட்ட அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.




கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு லட்சுமி புரத்தில் வசிப்பவர் இளங்கோ. இவரது 13 வயது மகன் கணேஷ். இவரது உறவினரின் 9 வயது மகள் தர்னிதா. இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணியளவில் அருகில் உள்ள தேநீர் கடைக்குச் சென்று டின் கூல்டிரிங்ஸ் (7 Up) வாங்கி குடித்துள்ளனர். இரவு தூங்கச் சென்று விட்ட நிலையில் நள்ளிரவில் இருவருக்கும் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாலை வரை அவதிப்பட்டுள்ளனர்.



இந்நிலையில் கூல்டிரிங்ஸ் குடித்ததால் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்றும், இப்பிரச்சினை எப்படி வந்தது என்று வந்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். சாப்பிட்ட உணவுடன், கூல்டிரிங்ஸ் குடித்ததால் இப்பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறி அவர்களுக்கு மருத்துவர் சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனர். கூல்டிரிங்ஸ்எக்ஸ்பைரி தேதி முடிந்ததாக கூறியுள்ளனர்.



ஆனால், அதற்கு இன்னும் 4 மாத காலம் இருப்பதை உணவு பாதுகாப்பு அதிகாரி கண்டறிந்துள்ளார். மேலும், அவர்கள் வாங்கி குடித்த கூல்டிரிங்ஸ் கடைக்கு சென்ற உணவு பாதுகாப்பு அலுவலர் மதுரை வீரன் அங்கிருந்த பல்வேறு நிறுவனங்களின் கூல்டிரிங்ஸ் பாட்டில்களை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, அருகில் உள்ள மொத்த விற்பனை கடைக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதில் பழைய தேதியில் தயாரித்த கூல்டிரிங்ஸ் பாட்டில்கள் ஏதும் இல்லை எனக் கூறி திரும்பிச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



ஆனால், அவர்கள் குடித்த பாட்டிலில் எக்ஸ்பைரி டேட் இருந்ததால் இந்த நிலைமை என்கின்றனர். ஆகவே உணவுப்பாதுகாப்பு துறையினர் இனிமேலாவது மெத்தனப்போக்கினை கடைபிடிக்காமல் இருந்தால் இது போல சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் என்று சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X