'மொபைல் டவர்' அமைக்க எதிர்ப்பு: ஹவுசிங் யூனிட் மக்கள் சாலை மறியல் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
'மொபைல் டவர்' அமைக்க எதிர்ப்பு: ஹவுசிங் யூனிட் மக்கள் சாலை மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
23:22

திருப்பூர்:ஹவுசிங் யூனிட் வீட்டுமனையில், மொபைல் போன் டவர் அமைக்க அனுமதிக்க கூடாதென, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருப்பூர் ஒன்றியம், முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது ஹவுசிங் யூனிட் பகுதியில், 1,500க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. குடியிருப்புக்கு மத்தியில், மொபைல் போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருவதாக, தகவல் பரவியது.இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, காங்கயம் ரோடு, ஹவுசிங்யூனிட் பிரிவு அருகே, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்பகுதிக்கு சென்ற போலீசாரும், அதிகாரிகளும், மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மக்கள் கலைந்து சென்றனர்.அப்பகுதியினர் கூறியதாவது:தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம், விற்கப்பட்ட வீட்டுமனையில், வீடு கட்டி வசிக்க மட்டுமே அனுமதியுள்ளது. மாறாக, மனை உரிமையாளர், மொபைல் டவர் அமைக்க ஒப்பந்தம் செய்து, 'மொபைல் போன்' டவர் அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம், வீட்டுமனையை குடியிருப்பாக பயன்படுத்த மட்டும் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.அதனை தொடர்ந்து ஆய்வு நடத்திய வருவாய்த்துறையினர், குடியிருப்பு மனையில், மொபைல் டவர் அமைக்க அனுமதியில்லை; அப்பணியை நிறுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X