மனைப்பிரிவு அனுமதி; 29ம் தேதி முகாம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
மனைப்பிரிவு அனுமதி; 29ம் தேதி முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
23:22

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில், மனைப்பிரிவுகள், வீட்டு மனைகள் அங்கீகாரம் வழங்கப்படாமல் உள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் அறிக்கை:வரும் 29 ம் தேதி காலை 10:30 முதல் மாலை 4:30 மணி வரை பின்வரும் விவரங்கள் படி இம்முகாம் நடைபெறும்.விண்ணப்பதாரர், வரன்முறைப்படுத்த வேண்டிய நிலத்தின் பத்திர நகல், 2016 க்கு முந்தைய மூலப்பத்திரம், பட்டா, சிட்டா நகல், மனைப்பிரிவு வரைபடம் நகல், வில்லங்க சான்று நகல், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். வேலம்பாளையம் மண்டல அலுவலகம் - வார்டுகள்: 1-15 வரை. தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்- உதவி பொறியாளர் ஹரி - 98947 47571. நஞ்சப்பா நகர் 2 வது மண்டல அலுவலகம். வார்டுகள் 16 - 30. தொடர்புக்கு ஆறுமுகம் - 98422 72494. நல்லுார் மண்டல அலுவலகம். வார்டு 31 -45. தொடர்புக்கு - கோவிந்தபிரபாகர், 86438 51051. ஆண்டிபாளையம் மண்டல அலுவலகம் - வார்டு 46 -60. ஹரி, 98947 47571. இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X