அவிநாசி, சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மதியம், 3:00 மணிக்கு துவங்கி, மாலை 6:00 மணி வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. வேட்டுவபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அசநல்லிபாளையம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள், காற்றில் சாய்ந்தன.விவசாயி பழனிசாமி கூறுகையில், ''4 ஆயிரம் வாழை மரங்களை நடவு செய்திருந்தேன். அறுவடைக்கு தயாராக இருந்த, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள், காற்றுக்கு சாய்ந்தன. இதனால், ஏழு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார். அப்பகுதியில் பல விவசாயிகளின் தோட்டங்களில் இருந்த வாழை மரங்களும் காற்றுக்கு விழுந்துள்ளன. வேளாண் துறையினர் கள ஆய்வு செய்து வருகின்றனர்.