பசுமை வளர்க்க மக்களுக்கு ஆர்வம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
00:07

திருப்பூர்:வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தில், தொங்குட்டிபாளையம் சிவசக்திநகரில், குடியிருப்பு பகுதியில், நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன,'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், பல்வேறு மாநிலங்களும் திரும்பி பார்க்கும் வகையில், வெற்றிகரமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகின்றன. மாவட்டத்தில், 10.50 லட்சம் இளம் மரங்கள் வளர்ந்து நிற்கும், குறுங்காடுகளே அதற்கு ஆதாரம்.ஏழாவது திட்டம், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன் துவங்கப்பட்டது; தென்மேற்கு பருவம் நிறைவடைய உள்ள நிலையில், ஒரு லட்சத்தை எட்டிப்பிடிக்கும் துாரத்தில் சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி, 94 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.குடியிருப்பு பகுதியில் பசுமையான மரங்களை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் காட்டிய மக்கள், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் மூலம், மரக்கன்று நட்டுள்ளனர். தொங்குட்டிபாளையம், சிவசக்தி நகர் பகுதி மக்கள், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் குறித்து அறிந்து, அதன் மூலமாக, நாட்டு மரக்கன்றுகளை நட்டு வளர்க்க திட்டமிட்டனர். அதன்படி, நேற்று புங்கன், நாவல், பூவரசு மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் அழைப்புவிடுத்துள்ளனர்.---தொங்குட்டிபாளையம், சிவசக்தி நகரில், நேற்று மரக்கன்று நடப்பட்டது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X