திருப்பூர்;திருப்பூர், வாரணாசிபாளையத்தில், இடி விழுந்ததில், தென்னை மரத்தில் தீப்பற்றி எரிந்தது.திருப்பூர் நகரம் மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று கனமழை பெய்தது. மழை பெய்யாத நிலையில், திடீரென இடி முழுக்கம் ஏற்பட்டது. திருப்பூர் காளிபாளையம் ஊராட்சி, வாரணாசிபாளையத்தில், தென்னை மரத்தில் இடி விழுந்ததால், மரம் தீப்பற்றி எரிந்தது. அருகே இருந்தவர்கள் அலறியடித்து ஓடியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், தென்னை மரம் எரிந்து கருகியது.