கொரோனா மீண்டும் விஸ்வரூபமெடுக்க விரும்புகிறதா சுகாதாரத்துறை?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
01:05

கோவை:கொரோனா விவகாரத்தில் மாவட்ட சுகாதார துறையின் தொடர் அலட்சியத்தால், மீண்டும் பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.கோவை மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 230க்கும் மேல் இருந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 2 முதல் 5 உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. தவிர, பள்ளி,கல்லுாரி மாணவ, மாணவியர் சமீபகாலமாக அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மாஸ்க் அணியாதவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சுகாதார துறையினர், மவுனம் காத்து வருகின்றனர்.கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் இருப்பதால், வாளையார், ஆனைகட்டி, வேலந்தாவளம், மீனாட்சிபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகள், தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.ஆனால், வாளையார், ஆனைகட்டி போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே முறையாக சோதனை நடத்தப்படுகிறது. பிற சோதனைச்சாவடிகளில், பயணிகளின் உடல் வெப்பநிலையைக்கூட பரிசோதிப்பதில்லை. தடுப்பூசி சான்றிதழ் சரிபார்ப்பதில்லை, குறிப்பிட்ட தேதிக்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரிப்பதில்லை.காசு கொடுத்தால் சர்ட்டிபிகேட்மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.


இதுகுறித்து, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கேட்டால், சுகாதார துறை தடுப்பூசி கொடுத்தால் தான், எங்களால் முகாமை நடத்த முடியும் என்கின்றனர்.இந்த சூழலில், மாநகராட்சியின் பல்வேறு இடங்களில், பொதுமக்களிடம் 300 முதல் 500 ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டு, சட்டவிரோதமாக தடுப்பூசி சான்றிதழ் போலியாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் இதுபோன்று பல்வேறு பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், இது குறித்து கேட்க மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணாவை, இரண்டு நாட்களாக தொடர்பு கொண்டும் எவ்வித பதிலும் இல்லை.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X