மாநகராட்சி இணையதளம் 'அப்டேட்' இழுவை: பாதாள சாக்கடை இணைப்பு கிடைக்கலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
01:07

கோவை:மாநகராட்சி இணைய தளத்துடன், tnurbanepay.tn.gov.in என்ற இணையதளத்தை ஒருங்கிணைக்கும் பணி தாமதமாகி வருவதால், பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல், பொதுமக்கள் தவிக்கின்றனர்.தமிழகத்தில், மற்ற மாநகராட்சிகளில், tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவே, சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தப்படுகிறது. கட்டட வரைபட அனுமதி, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு பெற விண்ணப்பிக்கப்படுகிறது.கோவை மாநகராட்சியில் மட்டும், புனே சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டு வந்தது. மற்ற மாநகராட்சியை போல், ஒருங்கிணைந்த இணைய தளம் பயன்படுத்த, கமிஷனர் ராஜகோபால் அறிவுறுத்தினார்.அதன்படி, மாநகராட்சி இணைய தளத்துடன், tnurbanepay.tn.gov.in என்ற இணையதளத்தை ஒருங்கிணைக்கும் பணி, ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து வருகிறது. இதன் காரணமாக, சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.முதல்கட்டமாக, இதற்கு தீர்வு ஏற்படுத்தி, வரி செலுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டது. கட்டட வரைபட அனுமதி பெற, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு பெற விண்ணப்பிக்க முடியாத நிலை தொடர்வதால், மாநகராட்சி சேவையை பெற முடியாமல், மக்கள் தவிக்கின்றனர்.வரைபட அனுமதி பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யும் வழிமுறையை, பதிவு பெற்ற பொறியாளர்களுக்கு, மாநகராட்சி அலுவலர்கள் படிப்படியாக கற்றுக்கொடுத்து வருகின்றனர்.தற்போது, காலியிட வரி நிர்ணயிப்பதற்கான விண்ணப்பம், சொத்து வரி பெயர் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்கள் மட்டும் பெறப்படுகின்றன.குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்புக்கு இன்னும் விண்ணப்பிக்க முடியாத நிலை தொடர்கிறது. புதிதாக குடியிருப்பு, வணிக கட்டடம் கட்டியிருப்போர், இவ்விணைப்புகள் பெற முடியாமல், பல மாதங்களாக தவிக்கின்றனர். கட்டட வரைபட அனுமதி பெற, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு பெற விண்ணப்பிக்க முடியாத நிலை தொடர்வதால், மாநகராட்சி சேவையை பெற முடியாமல், மக்கள் தவிக்கின்றனர்.மாநகராட்சி இணையதளத்துடன், tnurbanepay.tn.gov.in என்ற இணையதளத்தை ஒருங்கிணைக்கும் பணி, ஒரு நடந்து வருகிறது. இதன் காரணமாக, சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X