கோவை:கோவையில், நேற்று மாலை பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகளும் குளிர்ந்தன.கோவையில் நேற்று பகலில், வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மாலை 3:00 மணிக்கு மேல், நகரின் பல்வேறு பகுதிகளிலும், கனமழை பொழிந்தது.குறிப்பாக, ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி, கலெக்டர் அலுவலகம், ரத்தினபுரி, ஆவாரம்பாளையம், விளாங்குறிச்சி, நேரு நகர், சுந்தராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், அரை மணி நேரத்துக்கும் மேலாக மழைப்பொழிவு இருந்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதி ரோடுகளிலும், தண்ணீர் தேங்கியது.இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கோவை லங்கா கார்னர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, அவிநாசி மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில், வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.மழையால் கோவையின் பல்வேறு பகுதிகளும் குளிர்ந்தன. தொடர்ந்து மழைப்பொழிவு இருக்கும் என்பதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.