24 மணி நேர குடிநீர் திட்ட செயலாக்கம்: கர்நாடக இன்ஜினியர்களுக்கு விளக்கம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
24 மணி நேர குடிநீர் திட்ட செயலாக்கம்: கர்நாடக இன்ஜினியர்களுக்கு விளக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
01:10

கோவை:பயிற்சிக்காக, கோவை வந்த, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, 23 இன்ஜினியர்களுக்கு, 24 மணி நேர குடிநீர் திட்ட செயலாக்கம் தொடர்பாக விளக்கப்பட்டது.கர்நாடக மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகளில் பணிபுரியும், 23 இன்ஜினியர்கள் பயிற்சிக்காக, கோவை வந்திருக்கின்றனர். உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு மைய செயல்பாடு, வெள்ளலுாரில் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி, குளங்களில் 'ஸ்மார்ட் சிட்டி' பணி மேற்கொள்வதை பார்வையிட்டனர்.பின், 24 மணி நேர குடிநீர் திட்ட செயலாக்கம் தொடர்பாக, தமிழ்நாடு நகரியல் பயிற்சி மையத்தில், திட்ட ஆலோசகர் கோபாலகிருஷ்ணன் விளக்கினார்.மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டுகளில் எத்தனை வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்ய திட்டமிட்டிருப்பது, குடிநீர் கசிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து, மொபைல் செயலியில் பதிவிடுவது, அடுத்த சில நிமிடங்களில் தொழில்நுட்ப குழுவினர் சீரமைப்பது, ஜி.ஐ.எஸ்., தொழில்நுட்பத்தில் ஆன்-லைன் முறையில், குடிநீர் வினியோகம் மற்றும் கசிவு ஏற்படும் பகுதிகளை கண்காணிப்பது குறித்து விளக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X