தனியார் கல்லுாரியில் இயற்கை விவசாய கருத்தரங்கு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தனியார் கல்லுாரியில் இயற்கை விவசாய கருத்தரங்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
01:11

கோவை:கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியின், வேளாண் பொறியியல் துறை சார்பாக, 'நாட்டு மாடுகள் மற்றும் இயற்கை விவசாயம்' குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லுாரியின் தலைவர் பொங்கலுார் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.பாளையங்கோட்டை கால்நடை பண்ணை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் அறங்காவலர் மற்றும் இணைசெயலாளர் சிவகுமார் வெங்கடாச்சலம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நாட்டு பாலில் உள்ள புரதச்சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு தன்மைக்கான அறிவியல் காரணிகள் பற்றி, மாணவர்களிடையே அவர் பேசினார்.பவானிசாகரை சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி சோமசுந்தரம், இயற்கை விவசாயத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறினார். கல்லுாரி முதல்வர் மோகன்தாஸ்காந்தி, துணை முதல்வர் ரமேஷ் உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X