க.க.சாவடி:மதுக்கரையின் சுற்றுப்பகுதிகளில், கிரஷர்கள் உள்ளன. இவற்றிலிருந்து போல்டர், மெட்டல், ஜல்லிக்கற்கள் போன்றவை, தினமும் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. டிப்பர் லாரிகள், அனுமதிக்கப்பட்டதை காட்டிலும் கூடுதல் பாரத்துடன் செல்கின்றன. அவ்வாறு சென்ற ஏழு டிப்பர் லார்கள், நேற்று முன்தினம் க.க.சாவடி போலீசாரால் பிடிக்கப்பட்டன.ஒவ்வொரு லாரிக்கும் குறைந்தபட்சம், 20 ஆயிரம் முதல், 72 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. அவ்வகையில் மொத்தம், 4 லட்சத்து, 62 ஆயிரத்து 200 ரூபாய் அபராத தொகை செலுத்திய பின், லாரிகள் விடுவிக்கப்படும் என தெரிகிறது.