வடவள்ளி:கோவை அரசு சட்டக்கல்லூரியில், 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.இதில், 'சுதந்திர போராட்டம்' என்ற தலைப்பை கருப்பொருளாக வைத்து, சட்டக்கல்லூரி மாணவர்கள், கல்லூரியில் இருந்து மருதமலை அடிவாரம் வரை பேரணியாக சென்றனர். பேரணியின் துவக்கத்தில், சுதந்திர போராட்டம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் குறித்து, கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.அதோடு, 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி, 2023ம் ஆண்டு, ஆகஸ்ட் 15 வரை, மாணவர்களுக்கு, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, வழக்காடு மன்ற போட்டிகள் நடத்தப்படவுள்ளன.