அனுமதிக்கு மாறான கட்டடத்துக்கு 'சீல்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
01:20

கோவை:கோவையில், அனுமதிக்கு மாறாக கட்டப்பட்டிருந்த கட்டடத்தை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று பூட்டி, 'சீல்' வைத்தனர்.கோவை மாநகராட்சி பகுதியில், வரைபட அனுமதி பெறாமலும், அனுமதிக்கு மாறாகவும் கட்டடங்கள் கட்டுவது அதிகரித்து வருகிறது. சொத்து வரி நிர்ணயம் செய்யும்போதுதான் அனுமதிக்கு மாறாக, விதிமீறி கட்டியிருப்பது, மாநகராட்சிக்கு தெரிய வருகிறது.அதனால், அந்தந்த வார்டுகளை கவனிக்கும் உதவி/ இளம் பொறியாளர்கள், விதிமீறல் கட்டடங்களை கண்டறிந்து, நோட்டீஸ் வினியோகிக்க, கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார். அதன்படி, நகரமைப்பு பிரிவினரும், பொறியியல் பிரிவினரும் இணைந்து கள ஆய்வு செய்து வருகின்றனர்.மத்திய மண்டலம், 25வது வார்டு, வி.சி.வி., வீதியில், ஜித்தேந்திர சிங் மேத்தா என்பவர், 648 சதுர மீட்டர் பரப்புக்கு தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளத்தில், மூன்று குடியிருப்புகள் கட்டுவதற்கு வரைபட அனுமதி பெற்றிருந்தார்.அதற்கு மாறாக, 1,350 சதுர மீட்டர் பரப்புக்கு, நான்கு தளங்கள், 6 குடியிருப்புகள் கட்டி வருவதை, நகரமைப்பு பிரிவினர் கண்டறிந்தனர். இதுதொடர்பாக, மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதை கண்டுகொள்ளாமல், கட்டுமான பணியை தொடர்ந்து மேற்கொண்டனர்.உதவி நகரமைப்பு அலுவலர் பாபு தலைமையிலான குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர். விதிமீறலை உறுதி செய்ததும், 'அனுமதிக்கு மாறாகவும், விதிமீறல்களுடன் கூடுதலாகவும் கட்டப்பட்டு உள்ளதால், தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம் 1971ன் படி, கோவை மாநகராட்சியால் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது' என. அக்கட்டடத்தில் எச்சரிக்கை பலகை வைத்தனர். பின், கட்டடத்துக்குள் யாரும் நுழையாதபடி, பூட்டு போட்டு, 'சீல்' வைத்தனர்.மாநகராட்சி எல்லைக்குள் கட்டடம் கட்டுவதாக இருப்பின், அந்தந்த மண்டல அலுவலகங்களில் விண்ணப்பித்து, வரைபட அனுமதி பெற வேண்டும்; அனுமதிக்கேற்ப, கட்டுமான பணி மேற்கொள்ள வேண்டுமென, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X