ரூ.25 லட்சம் 'செக்' மோசடி வழக்கில் தலைமறைவு வியாபாரி கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
01:23

தேனி:வியாபாரத்திற்காக ரூ.25 லட்சம் கடன் பெற்று, 'செக்' மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த மதுரை அதலை அன்புவேலனை 41, போலீசார் அவரை கைது செய்தனர்.



தேனி, தாடிச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி எழுத்தர் மாரிச்சாமி 60. இவரது நண்பர் சந்திரசேகர் மூலம் மதுரை மாவட்டம், அதலையை சேர்ந்த அன்புவேலன் பழக்கமானார். வியாபாரத்திற்காக மாரிச்சாமியிடம் 2020 ஜன., 19 ல் அன்புவேலன் ரூ.25 லட்சம் கடனாக பெற்றார். கடன் பெறும்போது ரூ.10 லட்சம், ரூ. 15 லட்சத்திற்கு தனித்தனியாக காசோலைகளை வழங்கினார்.



இரண்டு காசோலைகளும் வங்கியில் பணமில்லாமல் திரும்பியது.தேனி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் 2020 அக்., 8 ல் மாரிச்சாமி வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிந்து 2021 மார்ச் 6ல், நீதிபதி ரூபனா, செக் மோசடி குற்றத்திற்கு ஓராண்டு சிறையும், 'செக்' பணமில்லாமல் திரும்பிய தேதியில் இருந்து கணக்கிட்டு ரூ.25 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் திருப்ப செலுத்தவும். மீறினால் 4 மாதம் கூடுதல் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.



வழக்கில் அன்பு வேலன் ஆஜராகமல் தலைமறைவாக இருந்தார். இவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில் சமயநல்லுார் போலீசார் அன்புவேலனை கைது செய்து தேனி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அதன்பின் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X