ஆரோக்கியமாக வாழ உணவுத் திருவிழாவில் 'டிப்ஸ்': வரிசைகட்டிய சிறுதானிய உணவுகள்:உணவுத் திருவிழாவில் 'டிப்ஸ்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
01:31

சூலூர்;ஆரோக்கியமாக வாழ ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் என, உணவுத் திருவிழாவில் அறிவுறுத்தப்பட்டது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், 'போஷன் அபியான்' எனும் தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது. பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக கர்ப்பிணிகள், வளர் இளம் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள், குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சூலூர் வட்டாரத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடந்தது.இதில், சோளப் பணியாரம், கருப்பு உளுந்து சாதம், சாமை, திணை, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இணைய வழியில் நடத்தப்பட்ட உணவு தயாரிக்கும் போட்டியில், சிறப்பான நான்கு உணவு வகைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.அப்போது, சோமனுார் ஆரம்ப சுகாதார நிலைய இயற்கை மருத்துவர் அருள்ஜோதி பேசியதாவது:நாம் இருக்கும் வரை ஆரோக்கியமாக வாழவேண்டும். அதற்கு, உணவு சாப்பிடும் முறைகளில் சிறிது மாற்றம் தேவை. சமைத்ததை விட, சமைக்காத உணவுகளில், 30 சதவீத ஊட்டச்சத்துகள் உள்ளன. காய்கறிகளை பச்சையாக சாப்பிட வேண்டும். பழ வகைகளை, 'ஜூஸ்' செய்யாமல் முழுமையாக சாப்பிடுங்கள்.கறிவேப்பிலையுடன் வெல்லம், தேங்காய் சேர்த்து சாப்பிடுவது நல்லது. குழந்தைகளுக்கு இந்த முறையில் உணவு வழங்கினால் ஆரோக்கியம் தரும். முளை கட்டிய பயிர்களை சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உடனடியாக கிடைக்கும். வைட்டமின் மாத்திரைகளை தேட வேண்டிய அவசியம் இருக்காது.இவ்வாறு, அவர் பேசினார்.ஊட்டச்சத்து நிபுணர் ஏஞ்சலின் பிரீத்தி, திட்ட அலுவலர் சம்ருதா, மேற்பார்வையாளர் ஜெயாமுரளிபாய், ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், திட்ட உதவியாளர் லட்சுமி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X