பெ.நா.பாளையம்:தடாகம் அருகே வரப்பாளையத்தில் உள்ள அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனம் சார்பில், இலவச தொழிற்பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றன.பாரத பிரதமரின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தில் இலவச பயிற்சி மையம் செயல்படுகிறது.இங்கு கம்ப்யூட்டர் கிராபிக் டிசைனர் பயிற்சி பெற, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சர்வீஸ் பயிற்சிக்கு, பிளஸ் 2 அல்லது டிப்ளமோ தேர்ச்சி தேவை. ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். முற்றிலும் வேலை இல்லாதவர்களுக்கு மட்டுமே இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சி காலம், 2 முதல், 3 மாதங்கள் வரை. தினமும் காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை, திங்கள் முதல் சனி வரை வகுப்புகள் நடக்கும்; செய்முறை பயிற்சியும் உண்டு.15 முதல், 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி முடிவடைந்தவுடன், அரசு சான்றிதழ், 100 சதவீத வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். பயிற்சிக்கு தவறாமல், வருபவர்களுக்கு ஊக்கத் தொகையாக, 100 ரூபாய் நாளொன்றுக்கு, அவர்களது வங்கி கணக்கில் அரசால் செலுத்தப்படும்.முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், இலங்கை அகதிகள், ஆதரவற்றோர் மற்றும் விதவை ஆகியோருக்கும் பயிற்சியில் அனுமதி வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள், மாற்றுச்சான்றிதழ், ஜாதி சான்றிதழ், 10 மற்றும் பிளஸ் 2, டிப்ளமோ சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 2 ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 99401 63309, 94436 52220 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.