பறக்கும் படை அதிகாரிகள் மாற்றம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பறக்கும் படை அதிகாரிகள் மாற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
01:33

அன்னுார்:கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண், 3ல், மாவட்ட கவுன்சிலர் தேர்தல் வரும், 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில், அன்னுார் ஒன்றியத்தில், 15 ஊராட்சிகளை சேர்ந்த, 59 ஆயிரத்து, 201 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம், தலா எட்டு மணி நேரத்துக்கு ஒரு பிரிவு, என மூன்று பறக்கும் படைகளை அறிவித்தது.இதில் பறக்கும் படை அதிகாரிகளாக தாசில்தார்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இதில் மாற்றம் செய்யப்பட்டு, அன்னுார் உதவி வேளாண்மை அலுவலர் மகாலிங்கம், உதவி தோட்டக்கலை அலுவலர் ரவிக்குமார், எஸ்.எஸ்., குளம் உதவி வேளாண் அலுவலர் சோமசுந்தரம் ஆகியோர் மூன்று பறக்கும் படைகளின் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்கள் சந்தேக பணப்பரிமாற்றம் குறித்தும், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்தும், 97918 68407, 99433 66422, 98422 21643 ஆகிய மொபைல் போன் எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X