பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 6 பவுன் நகையை திருடி சென்றனர்.பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வள்ளலார் நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி பரிமளா,49. இவர் வீட்டை பூட்டி விட்டு, சின்னியம்பாளையத்தில் உள்ள தனது மற்றொரு வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம், வீடு திரும்பியபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ஆறு பவுன் தங்க நகைகள் மற்றும் 'டிவி', கிரைண்டர், மொபைல் போன் ஆகியவை திருட்டு போயிருந்தது.பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் கைரேகைகளை பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரித்துவருகின்றனர்.