ஊர்க்காவல் படையினருக்கு கூடுதல் பணி: சிறப்பூதியம் வழங்க எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
02:27

உடுமலை;கூடுதல் பணி நாட்களை ஒதுக்கிய அரசுக்கும், ஊர்காவல் படையினர் நன்றி தெரிவித்தனர். சிறப்பு ஊதியம், இறந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.தமிழகத்தில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.போலீசாருக்கு உதவியாக இரவு ரோந்து பணி, போக்குவரத்தை சீர் செய்தல், திருவிழா, தேர்தல் பணிகள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊர்க்காவல் படையினருக்கு, மாதத்தில், 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு, ரூ. -560 என, 2,800 ரூபாய் வழங்கப்படுகிறது.கடந்தாண்டு, அவர்களுக்கு வழங்கப்படும் பணி நாட்களை, 10 நாட்களாக உயர்த்த வேண்டும், என பா.ஜ., தலைவர் அண்ணாமலை, உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில், மாதத்தில், 10 நாட்கள் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து, பணி வழங்க உத்தரவிட்ட, தமிழக முதல்வருக்கும், வழக்கு தொடர்ந்த பா.ஜ., தலைவருக்கும், உடுமலையிலுள்ள ஊர்க்காவல் படையினர் நன்றி தெரிவித்தனர். மேலும், வரும் காலத்தில், கூடுதல் பணி நாட்கள் வழங்கவும், கொரோனா தொற்று பரவல் காலத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதற்கு சிறப்பு ஊதியம், பணியின்போது இறந்த ஊர்க்காவல் படை வீரர் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X