செய்திகள் சில வரிகளில்... மூவாயிரம் மரக்கன்றுகள் இலக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
02:31

கிணத்துக்கடவு ஒன்றியம், காரச்சேரியில் மயானத்தை ஒட்டி, முட்புதர் ஆக்கிரமிப்பில் இருந்த, மூன்று ஏக்கர் மந்தை புறம்போக்கு நிலம் சமீபத்தில் சுத்தப்படுத்தப்பட்டது.இப்பகுதியில், பலவகை மரக்கன்றுகள் நடவு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இதற்கான நிகழ்ச்சி நடந்தது. அரசம்பாளையம் ஊராட்சி தலைவர் சுந்தரராஜன் முன்னிலையில், மாவட்ட உதவி திட்ட அலுவலர் கமலக்கண்ணன் பங்கேற்று, மரக்கன்று நடும் திட்டத்தை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, பி.டி.ஓ., விவேகானந்தன், மண்டல துணை பி.டி.ஓ., மகுடபதி ஆகியோர் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.ஊராட்சி தலைவர் கூறுகையில், ''வேலை உறுதி திட்டத்தின் கீழ், காரச்சேரி மந்தை புறம்போக்கில் உள்ள, 3 ஏக்கர் நிலத்தில், பூவரசன், வேம்பு, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி துவங்கியுளள்ளது. மூவாயிரம் மரக்கன்றுகள் வளர்ந்து, பசுஞ்சோலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


பழங்குடியின மக்களுக்காக குரல்


ஹிந்து மக்கள் கட்சியின், கோவை மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனரிடம் மனு கொடுத்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறை அடுத்த மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட, கல்லார் செட்டில்மென்ட் பகுதியில், காடர் இனத்தை சேர்ந்த பழங்குடியினர், 23 குடும்பங்கள் வசித்து வந்தனர். கடந்த, 2019ல் மழை வெள்ளத்தில் அவர்களின் குடிசைகள் அடித்துச்செல்லப்பட்டு, வீடுகள், உடமைகளை இழந்தனர்.தற்போது, அருகிலுள்ள தனியார் எஸ்டேட் குடியிருப்பில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.இவர்களுக்கு தொகுப்பு வீடுகள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை, எவ்வித நடவடிக்கையும் இல்லை.பழங்குடியினர் வசித்த பகுதிக்கு அருகில், மழை, வெள்ளத்தால் பாதிக்காத வகையில், தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்; அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.கான்கிரீட் ரோடு பணி துவக்கம்கிணத்துக்கடவு, குதிரையாலம்பாளையத்தில், 300 மீ., நீளத்துக்கு, மழை நீர் வடிகால் வசதியுடன் கூடிய, கான்கிரீட் ரோடு அமைக்க, மாவட்ட கவுன்சிலர் ராஜன், 9.40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது.மாவட்ட கவுன்சிலர் தலைமை வகித்தார். கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் சேனாதிபதி பங்கேற்று, கான்கிரீட் சாலை அமைப்பு பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய தி.மு.க., செயலாளர் செந்தில்குமார், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.துாய்மையானது பொதுக்கழிப்பிடம்வால்பாறை நகர் சிறுவர் பூங்கா பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி சார்பில், பல ஆண்டுகளுக்கு முன், பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது.கடந்த சில மாதங்களாக கழிப்பிடத்தை சுற்றிலும் புதர் சூழ்ந்ததாலும், தண்ணீர் வசதி இல்லாததாலும், பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.


இந்நிலையில்,வால்பாறை நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில், துாய்மை பணியாளர்கள் நேற்று காலை சிறுவர் பூங்கா கழிப்பிடத்தை, சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் நிம்மதியடைந்தனர்.


'ல'கரம் இங்கே 'ள'கரமாச்சுபொள்ளாச்சி நகராட்சி சார்பில், வீதிகளின் பெயர்களை குறிக்க அமைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளில், பல எழுத்து, சொல், பொருட்பிழைகள் காணப்படுகின்றன.மக்கள் கூறுகையில், 'தமிழகத்தில் அதிக வரி வசூலிக்கும் நகராட்சியில், தமிழுக்கு வந்த சோதனை இது' என, வேதனையுடன் கூறுகின்றனர்.இது குறித்து அதிகாரிகளும் கவலைப்பட்டு, மாற்றம் செய்வது போல தெரியவில்லை. உதாரணமாக, வெங்கடேசா காலனி 'வள்ளலார்' வீதி, நகராட்சி பெயர் பலகையில், 'வள்ளளார்' என, தவறாக எழுதப்பட்டுள்ளது. பிழையுள்ள அந்த பலகையும், ரோட்டில் அமைக்க நகராட்சி அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இந்த அடிப்படை தமிழறிவு கூட இல்லாமல், பெயர் பலகை நிறுவியுள்ளதால், மக்கள் வேதனை அடைகின்றனர்.மாணவர்களுக்கு சீருடை வினியோகம்உடுமலை அடுத்த குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நடப்பு கல்வியாண்டில், 9 முதல், 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேநேரம், பிற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பாட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.உடுமலை கல்வி மாவட்டத்தில், ஏற்கனவே, பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரடியாக வரவழைக்கப்பட்டு, இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.தற்போது, 6 முதல், 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சீருடையும், 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, நோட்டுப்புத்தகங்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேற்று, குடிமங்கலம், அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் பழனிசாமி தலைமையில், 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச சீருடைகள் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.கோவில் நிலம் குத்தகைக்கு ஏலம்கோவில்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான, 22 தென்னை மரங்கள், மற்றும் 1.49 ஏக்கர் நிலம், 48 ஆயிரம் ரூபாய்க்கு ஏல முறையில் குத்தகைக்கு விடப்பட்டது.ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, விநாயகர் கோவில் கோவில்பாளையத்தில் அமைந்துள்ளது.கோவிலுக்கு சொந்தமான, 1.49 ஏக்கர் மானவாரி நிலமும், காய்ப்பு நிலையில் உள்ள, 22 தென்னை மரங்களும் நேற்று ஏலம் விடப்பட்டன. ஹிந்து சமய அறநிலையத்துறை, கிணத்துக்கடவு சரக ஆய்வாளர் குறிஞ்சி, செயல்அலுவலர் சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. ஏலத்தில், ஐந்து பேர் பங்கேற்றனர்.இதில், 1.49 ஏக்கர் நிலத்தின் குத்தகை உரிமம், கோவில்பாளையத்தை சேர்ந்த பாலசுப்ரமணியத்துக்கு, 28 ஆயிரம் ரூபாய்க்கும்; 22 தென்னை மரங்களின் காய்ப்பு பலனை அனுபவிக்க, ராஜா என்பவர், 20 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் எடுத்தனர். இந்த குத்தகை ஏலமானது, மூன்று ஆண்டு காலத்துக்கானது.பொதுமக்களுக்கு அன்னதானம்


சன்மார்க்க சங்கம் சார்பில் சுகதார நிலையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரக்குடில் துறையூர் சார்பில், பொதுமக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், இச்சங்கத்தினர் பெதப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதிய உணவு அன்னதானம் வழங்கினர். மேலும், உடுமலை யு.கே.பி., நகரிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நான்கு வழிச்சாலை பணி தீவிரம்மடத்துக்குளம் தாலுகா மைவாடி, வேடபட்டி, கழுகரை உள்ளிட்ட கிராமப்பகுதியிலுள்ள விளை நிலங்களுக்கு மத்தியில், நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமடைந்துள்ளன. பொள்ளாச்சி துவங்கி திண்டுக்கல் வரை நீளும் இந்தப்பாதை, 3,649 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகிறது.உடுமலை, மடத்துக்குளம் நகரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், கிராமங்களின் ஓரங்களில் வாகனங்கள் பயணிக்கும் விதமாகவும், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, இரண்டு கி.மீ., தொலைவில் வடக்கு திசையில், இந்த நான்கு வழிச்சாலை கட்டமைக்கப்படுகிறது.இதற்காக விளை நிலங்களுக்கு மத்தியில், 10 அடி உயரத்திற்கு மண் கொட்டப்பட்டு கனரக இயந்திரங்களை பயன்படுத்தி, சமன் செய்யப்படுகிறது. இந்த அடிப்படை பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்பு, இதன் மீது தார் சாலை அமைக்கப்படும்.மழைநீர் வடிகால் துார்வாரும் பணி மடத்துக்குளம் அருகே கொமரலிங்கம் பேரூராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் துார்வாரும் பணி நடக்கிறது.


கொமரலிங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட சாமராயபட்டி, பெருமாள்புதுார், கொமரலிங்கம், குருவக்களம் உள்ளிட்ட பகுதியில், இந்தப்பணி வரும், 26 ஆம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து செயல் அலுவலர் கார்த்திகேயன் கூறுகையில், ''எதிர்வரும் மழை காலங்களில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் தேங்காத வகையிலும், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கவும், தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின்படி துார்வாரும் பணி நடக்கிறது,'' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X