ஆனைமலை:பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள், நேற்று,ஆழியாறு அணையில் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடரில் இருந்து தப்பிப்பது குறித்த, விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சிநடத்தினர்.ஆனைமலை தாசில்தார் விஜயகுமார் மற்றும்ஆழியாறு போலீசார் பங்கேற்றனர். இதில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, மக்கள் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.முதலுதவி அளிப்பது, வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாக தப்புவது, அவசர உதவி கேட்டு தகவல்தெரிவிப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும், நீரில் மூழ்கியோரை மீட்டு முதலுதவி அளிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.