வேளாண் வளர்ச்சிப்பணிகள்: மாவட்ட கலெக்டர் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
02:37

உடுமலை:உடுமலை பகுதிகளில், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகளை, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.வேளாண்துறை சார்பில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம், வேளாண் இயந்திரமயமாக்குதல், பாசன பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மைத்திட்டம், நீர் வள நிலவளத்திட்டம், பண்ணை குட்டைகள் அமைத்தல், ஆழப்படுத்துதல், சிறு பாசனத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தார்.உடுமலை அருகேயுள்ள பள்ளபாளையத்தில், கூட்டுப்பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட, வேளாண் கருவிகளை ஆய்வு செய்து, திட்ட செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.நீரை சிக்கனமாக பயன்படுத்தும் பாசன முறையான, நுண்ணீர் பாசன திட்டம் அமைக்க, சிறு, குறு விவசாயிகளுக்கு, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், 100 சதவீதம் மானியமும், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.நுண்ணீர் பாசன முறை வாயிலாக, குறைந்த நீரில் அதிக பரப்பு சாகுபடி, தொழிலாளர்கள் தேவை குறைவு மற்றும் உரம் சிக்கனம் குறித்து விளக்கினார்.இத்திட்டத்தில், நீர்த்தேக்க தொட்டி அமைக்க, 40 ஆயிரம் ரூபாய், மின் மோட்டார் பொருத்த, 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மானுப்பட்டி பகுதிகளில் அமைக்கப்பட்ட நுண்ணீர் பாசனத்திட்டங்களை ஆய்வு செய்து, இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.நல்லாறு தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட, மதிப்பு கூட்டு இயந்திரங்களை ஆய்வு செய்தார்.பெரியவாளவாடியில், தோட்டக்கலைத்துறை சார்பில், 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், 8.9 லட்சம் ரூபாய் மானியத்தில் அமைக்கப்பட்ட பசுமைக்குடிலினை ஆய்வு செய்து, தரமான நாற்றுக்ளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதாகவும், இதன் வாயிலாக, மாதம் ஒரு லட்சம் ரூபாய் லாபம் ஈட்டுவதாக, விவசாயி ராதாகிருஷ்ணன் கூறினார்.வேளாண் விற்பனை துறை சார்பில், முக்கோணம் பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட, தக்காளி கூழாக்கும் வாடகை இயந்திரத்தையும், பொறியியல் துறையின் சார்பில் சாளையூரில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தினையும் ஆய்வு செய்தார்.இதில், வேளாண் இணை இயக்குனர் மனோகரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பிரேமாவதி மற்றும் அதிகாரிகள்,விவசாயிகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X