சின்ன வெங்காயம் விதை இருப்பு: விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
சின்ன வெங்காயம் விதை இருப்பு: விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
02:38

உடுமலை:வேளாண் அறிவியல் நிலையத்தில், சின்ன வெங்காயம் விதை இருப்பு உள்ளதால் விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.திருப்பூர் மாவட்டத்தில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு சில நேரங்களில் விதை வெங்காயத்தின் விலை அபரிமிதமாக உயர்ந்து காணப்படுகிறது.இதனால், பல விவசாயிகள் உயர் ரக வெங்காயத்தை விதை மூலம் நாற்று உற்பத்தி செய்து நடவு செய்கின்றனர்.மேலும், உயர்ரக வெங்காயம் குளிர் மற்றும் பனியை தாங்கி வளரும். விளைச்சலும் அதிகம் கிடைக்கும்.விரைவில், கார்த்திகை பட்டம் துவங்க உள்ளது. அப்போது பனியின்தாக்கம் அதிகமாகஇருக்கும். பனி காலத்தில் உயர்ரக வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.ஒரு சில சமயங்களில் விதைக்கும் தட்டுப்பாடு ஏற்படுவது உண்டு. அப்போது, விதைகளை வாங்க விவசாயிகள் பெரும் அலைச்சலுக்கு உள்ளாகின்றனர். அதன் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.இதனால், விதை ஒரு கிலோ மூன்று ஆயிரம் ரூபாயிலிருந்து, 15 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது.வெங்காயம் விதை தட்டுப்பாட்டை தவிர்க்கவும், கார்த்திகை பட்ட நடவுக்கு முன் கூட்டியே நாற்றங்கால் தயார் செய்யவும் வசதியாக, பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலையத்தில் சின்ன வெங்காயம் 'கோ- 6' விதை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.விதை தேவைப்படுவோர் பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலையத்தை, 98422 07031 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X