உள்ளாட்சி இடைத்தேர்தல்; மனு பரிசீலனை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
உள்ளாட்சி இடைத்தேர்தல்; மனு பரிசீலனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
02:40

பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றியங்களில், ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட அனைவரின் மனுக்களும் ஏற்கப்பட்டன.தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அக்., 9ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. இதற்காக கடந்த, 15ம் தேதி துவங்கிய மனு தாக்கல், நேற்று முன்தினம் நிறைவடைந்தது. நேற்று, மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.



பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஜமீன்முத்துார் ஆறாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு, ஐந்து பேர்; போளியகவுண்டன்பாளையம் நான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு நான்கு பேரும், ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்சாபுதுார் ஊராட்சி தலைவர் பதவிக்கு, ஐந்து பேர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.இந்நிலையில், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு மற்றும் ஆனைமலை ஒன்றியங்களில், இடைத்தேர்தலில், போட்டியிட தாக்கப்பட்ட அனைவரின் மனுக்களும் ஏற்கப்பட்டது.

உடுமலை

உடுமலை ஒன்றியம், ஆர்.வேலுார் ஊராட்சித்தலைவர் பதவியிடத்துக்கும், குடிமங்கலம் ஒன்றியம், ஆமந்தகடவு ஊராட்சி, 5வது வார்டு உறுப்பினர் பதவியிடத்துக்கும், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.நேற்று, வேட்பு மனுக்கள் தேர்தல் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில், பரிசீலனை செய்யப்பட்டன.இதில், ஆர்.வேலுார் ஊராட்சித்தலைவர் பதவிக்கு, வழங்கப்பட்ட நான்கு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆமந்தகடவு 5 வது வார்டுக்கு, 3 மனுக்கள் பெறப்பட்டதில், ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. - நிருபர் குழு -

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X