சென்னை:சென்னை, கோவையை தொடர்ந்து, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழகத்தில் உள்ள 300 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும் 1.60 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், கோவையில் 226 பேர்; சென்னையில் 222 பேர்; ஈரோட்டில் 116 பேர்; செங்கல்பட்டில் 107 பேர்; சேலத்தில் 88 பேர்; திருப்பூரில், 82 பேர் என 1,745 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.அதில், 12 வயதுக்கு உட்பட்ட 81 சிறார்களும்; 60 வயதுக்கு மேற்பட்ட 299 முதியோரும் உள்ளனர். இதுவரை 98 ஆயிரத்து 951 சிறார்களும்; 3 லட்சத்து 82 ஆயிரத்து 869 முதியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு மார்ச் முதல் தற்போது வரை 4.59 கோடி மாதிரிகள் பரிசோதனையில் 26 லட்சத்து 52 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிகிச்சை முடிந்து நேற்று 1,624 பேர் உட்பட, 25 லட்சத்து 99 ஆயிரத்து 567 பேர் வீடு திரும்பியுள்ளனர்.தற்போது கோவையில் 2,145 பேர்; சென்னையில் 2,105 பேர்; ஈரோட்டில் 1,337 பேர்; செங்கல்பட்டில் 1,183 பேர்; தஞ்சாவூரில் 993 பேர் என 17 ஆயிரத்து 121 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தொற்றால் நேற்று 27 பேர் உட்பட 35 ஆயிரத்து 427 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.