வி.ஐ.பி., மகனுக்கு மிரட்டல்: வனச்சரக அலுவலர் கைது | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வி.ஐ.பி., மகனுக்கு மிரட்டல்: வனச்சரக அலுவலர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
03:24

வால்பாறை:வால்பாறையில், வி.ஐ.பி.,யின் மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, வனச்சரக அலுவலரை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது, சிறுகுன்றா எஸ்டேட். இங்குள்ள, வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதியில், வி.ஐ.பி., ஒருவரின் மகன் உட்பட மூன்று பேர், நேற்று முன்தினம் இரவு தங்கினர்.அவர்கள் அறையில் இருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சென்ற வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயசந்திரன், 'யானை நடமாட்டம் அதிகமுள்ளது; இப்போது நீங்கள் வெளியே வரக்கூடாது' என்று கூறியுள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது, வனச்சரக அலுவலர் குடிபோதையில் இருந்ததாகவும், தங்கும் விடுதியில் இருந்து அவர்களை வெளியேற்றியதுடன், வி.ஐ.பி.,யின் மகனை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து, வால்பாறை கோர்ட் எழுத்தர் மனோகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில், 'தகாத வார்த்தையில் திட்டியது, கொலை மிரட்டல் மற்றும் போதையில் பொது இடத்தில் தகராறு' என்ற பிரிவுகளில், வனச்சரக அலுவலர் ஜெயசந்திரன் 35, மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.வால்பாறை கோர்ட்டில் ஆஜர்படுத்திய வனச்சரக அலுவலரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் கவிதா உத்தரவிட்டார்.வனத்துறையினர் போராட்டம்இச்சம்பவத்தை கண்டித்தும், வனச்சரக அலுவலர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாடு வன அலுவலர் சங்கம் சார்பில், பொள்ளாச்சி, உடுமலை வனக் கோட்டத்துக்கு உட்பட்ட பணியாளர்கள், பணியை புறக்கணித்து, அட்டகட்டியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X