பா.ம.க., ஆலோசனைக் கூட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
04:08

திண்டிவனம்-பா.ம.க.,வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், அ.தி.மு.க.,வில் இணைந்ததையடுத்து, திண்டிவனம் நகர பா.ம.க., சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க., வெளியேறிய விவகாரம் அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நேற்று முன்தினம் திண்டிவனத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாசுடன் ஆரம்ப காலத்திலிருந்து இணைந்து பணியாற்றிய மாநில துணைத் தலைவர் ஏழுமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.இந்நிலையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உத்தரவின் பேரில், திண்டிவனத்தில் நேற்று மாலை 3:30 மணியளவில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பால்பாண்டியன் ரமேஷ் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் இசக்கி, அமைப்பாளர் செல்வகுமார், மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார் சிறப்புரையாற்றினர்.மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பராயலு, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயராஜ், செந்தில், சவுந்தர், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பிச்சை முகமது, வன்னியர் சங்க செயலாளர் ரவி, மகளிரணி தனலட்சுமி, கவிதா, குமாரி, முன்னாள் மாவட்ட செயலாளர் பிரபு, நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், தொடர் போராட்டங்களை நடத்தி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்த நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர்களுக்கு நன்றி தெரிவிப்பது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபடுவது.பா.ம.க.,வில் அனைத்து சமுதாயத்தினரையும் உறுப்பினர்களாக சேர்த்து, அனைத்து சமுதாய மக்களின் உரிமைகளுக்காக பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X