ரூ.48 ஆயிரம் கையாடல் 'மாஜி' அதிகாரி கைது | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
ரூ.48 ஆயிரம் கையாடல் 'மாஜி' அதிகாரி கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
04:08

விழுப்புரம்-அஞ்சலக கணக்குகளில் 48 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்த முன்னாள் கிளை அஞ்சலக அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருப்பாலப்பந்தலைச் சேர்ந்தவர் முருகன் மகன் ராஜகுரு, 34; கீழ்மாம்பட்டு கிளை அஞ்சல் அலுவலகத்தில், கிளை அஞ்சலக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.இவர், 2007 ஜூன் 14ம் தேதி முதல் 2018 ஜூன் 13ம் தேதி வரை அஞ்சலக கணக்குகளில் கமலக்கண்ணன் மகள் நிமாஷினி பெயரில் இருந்த 17 ஆயிரம் ரூபாய், ஜெயராணி மகள் சாதனா பெயரில் இருந்த 20 ஆயிரம் ரூபாய், செந்தமிழ்ச்செல்வி மகள் யாழ்மொழி பெயரில் இருந்த 11 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 48 ஆயிரம் ரூபாயை கையாடல் செய்தார்.இது குறித்து உதவி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பிரவீன் கொடுத்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து ராஜகுருவை நேற்று கைது செய்தனர்.பணம் கையாடல் செய்ததன் காரணமாக 2018ல் ராஜகுரு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X