முந்திரி கம்பெனி ஊழியர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
04:15

விக்கிரவாண்டி-பண்ருட்டி அருகே இறந்த முந்திரி கம்பெனி ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராசு, 60; இவர், பனிக்கன்குப்பத்தில் உள்ள எம்.பி., ரமேஷுக்கு சொந்தமான முந்திரி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.இவர் 20ம் தேதி அதிகாலை கம்பெனியில் விஷம் குடித்ததாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, கோவிந்தராசு உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.இதற்கிடையே கோவிந்தராசு மகன் செந்தில்வேல், 30; சென்னை ஐகோர்ட்டில், தனது தந்தை இறந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். பிரேதே பரிசோதனையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டும் என மனு அளித்தார்.மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரியில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.அதன்படி, இறந்தவரின் உடலை நேற்று மதியம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் அசோக், அனுபன்குமார், சித்தார்த் தாஸ், கிருத்திகா, நிர்மல் குமார், மற்றும் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லுாரி டாக்டர் டீக்கால் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் நேற்று மதியம் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவுடன் செய்தனர்.பிரேதே பரிசோதனை மாலை 4:30 மணியளவில் முடிந்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தபோது, வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலுார் எஸ்.பி., சக்தி கணேசன், பண்ருட்டி டி.எஸ்.பி., சபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் பூவராகவன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில், இறந்த கோவிந்தராசு குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அதற்கு, எஸ்.பி., சக்தி கணேசன், கோரிக்கை குறித்து கடலுார் கலெக்டர் மூலம் அரசுக்கு தெரிவிப்பதாக கூறினார்.கலெக்டர் உறுதிமொழி அளித்த பின் உடலை பெற்றுச் செல்கிறோம் என தெரிவித்தனர். மாலை 6:40 மணியளவில் கலெக்டர், மொபைல் போன் மூலம் போராட்டக்காரர்களிடம் தொடர்பு கொண்டு, 'உடலை பெற்றுக்கொள்ளுங்கள், பிறகு பேச்சு வார்த்தை நடத்திக் கொள்ளலாம் என உறுதியளித்ததின் பேரில், இரவு 7:00 மணிக்கு கோவிந்தராசுவின் உடலை அவரது மகன் செந்தில்வேல் பெற்றுக்கொண்டார். இரவு 8:45 மணிக்கு கோவிந்தராசுவின் உடல் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X