பம்பருடன் உலா வரும் கார்களால் ஆபத்து
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
04:19

உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பம்பர் பொருத்திய காரில் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.கார் உள்ளிட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது சேதாரம் ஏற்படுவதை தவிர்த்திட, 'கிராஷ் கார்டு' எனப்படும் பம்பர் பொருத்துகின்றனர். பம்பர் தங்கள் உயிருக்கும், எதிரில் வருபவரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடுகின்றனர்.காரில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு கருதி, காரின் முன் மற்றும் பின்பக்க பகுதிகள் வடிவமைக்கப்பட்டு இருக்கும். பம்பர் பொருத்தாத காரில் 'சீட்' பெல்ட் அணிந்து செல்லும் போது, விபத்தில் சிக்கினாலும், 'சென்சார்' உடனே செயல்படும். 'ஏர் பேக்' விரிவடைந்து, காரில் இருப்பவர்களை சூழ்ந்து, உயிரை காப்பாற்றும்.ஆனால், பம்பர் பொருத்திய கார், விபத்தில் சிக்கும்போது, அதில் ஏற்படும் அதிர்வுகளை பம்பர் தாங்கிக் கொள்ளும். அதனால், 'சென்சார்' செயல்படாது. 'ஏர் பேக்' வெளியே வராது. சீட் பெல்ட் அணிந்து காரில் பயணித்தாலும் உயிரை இழக்க நேரிடும்.இதே போல் 'ஏர் பேக்' வசதி இல்லாத கார் உள்ளிட்ட வாகனங்களிலும் பம்பர் பொருத்தக் கூடாது. காரணம், விபத்து நேரிடும் போது எதிரே மோதும் வாகனம் அல்லது தனி நபருக்கு உயிர் சேதம் உள்ளிட்ட பெருத்த சேதத்தை ஏற்படுத்தும். இதனை உணர்ந்தே மத்திய அரசு, கார் உள்ளிட்ட வாகனங்களில் பம்பர் பொருத்த தடை விதித்துள்ளது.இதனை எதிர்த்து, பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாகனங்களில் பம்பர் பொருத்த மத்திய அரசு விதித்த தடை சரியே என தீர்ப்பளித்தனர். இது, வி.ஐ.பி., வாகனங்களுக்கும் பொருந்தும் என ஐகோர்ட் தெளிவுபடுத்தி உள்ளது. இந்த உத்தரவு புதுச்சேரி மாநிலத்திற்கும் பொருந்தும்.6 மாதம் சிறைமோட்டார் வாகன சட்டம் 182 பிரிவு ஏ(4)ன் கீழ், வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத மாற்றங்களை செய்வது, பம்பர் போன்றவற்றை கூடுதலாக பொருத்துவது குற்றமாகும். இந்த குற்றத்திற்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.அலட்சியம்அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் மெத்த படித்த உயர் அதிகாரிகளின் கார்களில் கூட பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் பலர் சட்டை கசங்கிவிடும் என்பதற்காக சீட் பெல்ட் அணிவதில்லை. புதிய கார்களில் 'சீட்' பெல்ட் அணியாவிட்டால் 'பீப்' சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கும். சீட் பெல்ட் அணிந்தால் மட்டுமே சத்தம் நிற்கும். அந்த சத்தத்தை கட்டுப்படுத்த, தங்களை அறிவாளியாக நினைத்துக் கொண்டு, சீட் பின்புறம் பெல்ட்டை இழுத்துமாட்டிவிடுகின்றனர். இதன் மூலம் 'பீப்' சத்தத்தை கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் விபத்து நேர்ந்தால் உயிர் போவது உறுதி என்பதை அந்த அறிவாளிகள் உணர வேண்டும்.



-நமது நிருபர்-


 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X