வலை வலை;  விசுவாசிகளுக்கு அரசியல் கட்சிகள்..... உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பளிக்க முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

24 செப்
2021
06:34
பதிவு செய்த நாள்
செப் 24,2021 04:22

புதுச்சேரி-கட்சிக்கு உண்மையாக உழைத்தவர்களை தேடிக் கண்டுபிடித்து, உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு அளிக்க நிர்வாகிகளுக்கு பிரதான கட்சிகள் உத்தரவிட்டுள்ளன.



புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் வரும் 30ம் தேதி துவங்குகிறது.வார்டு குளறுபடி கார ணமாக உள்ளாட்சி தேர்தல் நடக்குமா, நடக்காதா என குழப்பம் ஏற்பட்டது. எனவே, உள்ளாட்சி தேர்தல் தள்ளிபோகும் என நினைப்பில் இருந்த பிரதான அரசியல் கட்சிகளுக்கு, மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் அறிவிப்பு, கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



வேறு வழியின்றி உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பிரதான அரசியல் கட்சியினரும் தயாராகி வருகின்றனர். குறுகிய நாட்களுக்குள் வேட்பாளரை தேடி பிடிக்கும் கட்டாய நிலைக்கு கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. இதனால், உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க வாய்ப்புள்ள செல்வாக்கு மிக்க வேட்பாளர்களை கண்டறியும்படி, நிர்வாகிகளை அவசரப்படுத்தியுள்ளனர்.ஒவ்வொரு சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் அரசியல் காட்சிகள் முற்றிலும் மாறுவது வழக்கம். ஒரு கட்சியில் இருந்தவர், அடுத்த கட்சிக்கு தாவிவிடுவர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், எம்.எல்.ஏ.,க்கள், சீட் கிடைக்காதவர்கள், பல்வேறு கட்சிக்கு மாறி சென்று போட்டியிட்டுள்ளனர்.அவர்களுடன் முக்கிய கட்சி பிரமுகர்களும் இடம் பெயர்ந்து விட்டனர். இதனால் பல தொகுதிகளில் கட்சிக்கு ஓட்டுகள் குறைந்து பலத்த அடி விழுந்தது. இதனால் அங்கெல்லாம் கட்சி வேட்பாளர்களை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, சட்டசபை தேர்தலில் கிடைத்த கசப்பான அனுபவ பாடத்தினால், கட்சியில் உள்ள உண்மையான விசுவாசிகளை தேடி பிடித்து, ஓரிரு தினங்களில் பரிந்துரை செய்யுங்கள் என பிரதான கட்சிகள், தங்களுடைய மாநில நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளன.அவர்களும் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு சீட்டு கொடுக்க பரிந்துரை செய்யலாம் என சாதக பாதகங்களை ஆராய்ந்து வருகின்றனர்.உதிரி கட்சிகள்:பிரதான கட்சிகளை தவிர மற்ற உதிரி கட்சிகள் அனைத்தும் தனித்து போட்டியிடுவதை, கல்லை கட்டி, கிணற்றில் குதிப்பதற்கு சமம் என்று உணர்ந்துள்ளன.



இருப்பினும் வேறு வழியின்றி, உதிரி கட்சிகள் கவுரவத்துக்காக வேட்பாளர்களை நிறுத்தி, தங்களது செல்வாக்கை சுய பரிசோதனை செய்யும் விஷப்பரீட்சையில் இறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.இதனால், உதிரி கட்சிகளும் வேட்பாளர்களை வலை வீசி தேடி வருகின்றன. ஒவ்வொரு ஊரிலும் உள்ள முக்கிய கட்சி பிரமுகர்கள், அந்தந்த தொகுதியை தொடர்பு கொண்டு இப்போதே உங்களுக்கு சீட் கொடுக்கிறோம். நீங்கள் களப்பணியை கவனிக்க செல்லுங்கள் என பேசி வருகின்றன.கலெக் ஷனே கண்:தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெறும் எண்ணத்தில் பணிகளை மேற்கொள்வோர் ஒருபுறமிருக்க, கலெக் ஷன் பார்க்கும் நோக்கத்தில் பலர் களமிறங்க தயாராகி வருகின்றனர்.வழக்கத்தை விட இந்த உள்ளாட்சி தேர்தலில் கலெக் ஷன்வேட்பாளர்கள் அதிகரிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வார்டில் தொண்டு நிறுவனம், சேவை அமைப்பு, ஜாதி அமைப்பு போன்றவை மூலம், மக்களிடம் ஓரளவு அறிமுகம் கிடைத்த பலர், இதுபோன்ற வேலையில் இறங்க ரெடியாகி உள்ளனர்.



இவர்கள் போட்டியிடும் போது, வெற்றிவாய்ப்புள்ள கட்சி அல்லது சுயேட்சை வேட்பாளரின் ஓட்டுக்கள் பிரியும் நிலை ஏற்படும். இதை பயன்படுத்தி ஒரு தொகையை சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் கறந்து கொண்டு, கடைசி நேரத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்துவிட திட்டமிட்டுள்ளனர்.இதேபோல், தங்கள் பகுதியில் ஓரளவு அறிமுகமான லெட்டர் பேடு கட்சியினரும் இவ்வகை கலெக் ஷனை எதிர் நோக்கி வார்டு பணிகளை கவனிக்க துவக்கியுள்ளதால், உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X