புதுச்சேரி-உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதி அமல் காரணமாக கூட்டுறவு சங்க தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து புதுச்சேரி ஆசிரியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை:எங்களது கூட்டுறவு சங்கத்திற்கு கடந்த 2ம் தேதி அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. கூட்டுறவுத் துறை பதிவாளரும் சங்க தேர்தல், ஓட்டு பதிவுகள் நடக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார். எனவே, சங்கத்திற்கு வரும் 26ம் தேதி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்க இருந்த ஓட்டுப் பதிவு நடக்காது.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.