ஸ்டாக்ஹோம் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டும் நோபல் பரிசு வழங்கும் விழாவை, 'ஆன்லைன்' வாயிலாகவே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருதுகள் வரும் அக்., 4ம் தேதி முதல் 11 வரை அறிவிக்கப்பட உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் விழாவை, 'ஆன்லைன்' வாயிலாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போல் அந்தந்த நாடுகளில் உள்ள சாதனையாளர்களுக்கு தனித்தனியாக நோபல் பரிசுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நோபல் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் விதார் ஹெல்கெசன் நேற்று வெளியிட்டார்.