உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க., ஆலோசனை | செய்திகள் | Dinamalar
உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க., ஆலோசனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
04:29

புதுச்சேரி-உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது சம்பந்தமாக மேற்கு அ.தி.மு.க., மாநில நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம், கம்பன் கழகம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மேற்கு அ.தி.மு.க., மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள், பிற அணி மாநில செயலாளர்கள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கருத்துகளை முன் வைத்தனர்.உள்ளாட்சி தேர்தல் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கும் தேர்தல் பணி ஆற்றி வெற்றி பெற வைப்பது என தீர்மானம் நிறைவேற்றபட்டது.மாநில அவைத்தலை வர் ராமதாஸ், மாநில துணை தலைவர்கள் நந்தன், ஆனந்தன் இணைச்செயலாளர் காசிநாதன், துணைச் செயலாளர்கள் நாகமணி, கோவிந்தம்மாள், சதாசிவம், பொருளாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X