இலவச சிகிச்சை திட்டம்: ஜிப்மர் முடிவால் அதிர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
04:32

புதுச்சேரி-ஜிப்மரில் இனி, சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருந்தால் மட்டுமே இலவச சிகிச்சை பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஜிப்மர் நிறுவனம் புதுச்சேரியில் 1823ல் துவக்கப்பட்டது. தற்போது 2,300 படுக்கை வசதிகளுடன் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையாக ஜிப்மர் இயங்கி வருகிறது. தினமும் 8, 000 வெளி நோயாளிகள், 2,000 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.மாத வருமானம் 2,499 ரூபாய் கீழ் உள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு ஜிப்மரில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை பிறமாநிலத்தே சேர்ந்தவர்களுக்கும் விரிவுப்படுத்த ஜிப்மர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை;புதுச்சேரியை சேர்ந்த மாத வருமானம் 2,499 ரூபாய் சம்பாதிக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜிப்மருக்கு பல மாநிலத்தவர்கள் சிகிச்சைக்கு வருவதால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற மருத்துவமனையாக உள்ளது.எனவே அனைத்து மாநிலங்களிலும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புறநோயாளிகள் சிசிச்சை பிரிவு, நோய் கண்டறிதல், இன்பிளான்ட் பிரிவில் இலவச சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம்.பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் சிவப்பு ரேஷன் கார்டுகளை காண்பித்தால் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். வேறு எந்த ஆவணமும்தகுதியாக கேட்க கூடாது. இத்திட்டம் அடுத்த மாதம் 1ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அதிர்ச்சிஜிப்மர் மருத்துவமனையில் 2,499 ரூபாய் மாத வருமானம் குறிப்பிட்டு, முதலில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகள் சிகிச்சை எடுத்து கொள்ள அனுமதிக்கப்படுவது வழக்கம்.அதன் பின்,வருமான சான்றிதழ் வருவாய் துறை அதிகாரிகளிடம் வாங்கி வந்து கொடுத்து தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் சிவப்பு, மஞ்சள் ரேஷன் கார்டு என எந்த பாகுபாடு இல்லாமல் இதுவரை பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் மட்டுமே பயனடைந்து வந்தனர்.ஜிப்மரின் புதிய அறிவிப்பால் இனி, சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருந்தால் மட்டுமே இலவச சிகிச்சை பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மஞ்சள் கார்டு வைத்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் இலவச சிகிச்சை பெற முடியாது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் கார்டு குறித்த எந்த கள ஆய்வும் இல்லாமல் உள்ளது. வசதி படைத்தவர்கள், அரசு ஊழியர்கள் கூட சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ளனர்.அண்மையில் கூட 10 ஆயிரம் அரசு ஊழியர்களின் ரேஷன் கார்டுகள் பட்டியலில் இருந்து குடிமை பொருள் வழங்கல் துறை நீக்கியது. அனைத்து நிலைகளிலும் ஏழைகள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் உள்ளனர். அவர்களுடைய வருமானத்தை கணக்கிடாமல், ரேஷன் கார்டு நிறத்தை வைத்து இலவச சிகிச்சை திட்டத்தை அமல்படுத்துவது சரியாக இருக்காது.வறுமைகோடு கணக்கீடு சரியாஜிப்மரில் இலவச சிகிச்சை திட்டத்திற்கு மாத வருமானம் 2,499 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு 83 ரூபாய் சம்பாதிப்பவர் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர் என ஜிப்மர் பட்டியலிடுகிறது. இது சரியான கணக்கீடு இல்லை. சாதாரண கூலி வேலைக்கு செல்வோர் கூட 200 ரூபாய் சம்பாதிக்கின்றனர். நுாறு நாள் வேலை திட்டத்தில் கூட 150 ரூபாய் தினக்கூலி வழங்கப்படுகிறது. எனவே, வறுமை கோடு நிர்ணய தொகையை தற்போதைய விலைவாசி குறியீடுகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X