விழுப்புரம்-மதுபானம் கடத்தல் மற்றும் விற்பனையை கண்காணிப்பதற்கான ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:மாவட்டத்தில் உள்ள 124 டாஸ்மாக் கடைகளில் இருப்பு மற்றும் விற்பனையை ஆய்வு செய்ய வேண்டும். மதுபானங்கள் பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து கடத்துவதைத் தடுக்க வேண்டும்.எந்தவொரு தனிபட்ட நபருக்கோ அல்லது அரசியல் கட்சிகளுக்கோ தேர்தல் நடத்தை விதிகளை மீறி மொத்த மதுபானம் விநியோகம் செய்யக்கூடாது.கிராமப் பகுதிகளில் அதிகமாக மதுபானம் விற்பனையாவதை கண்காணிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறி மதுபானம் விற்கும் நபர்கள் தொடர்பான விபரங்கள் கிடைத்தால், பறக்கும் படை அலுவலர்கள் மூலம் அந்த பகுதியை விரைந்து ஆய்வு செய்து, சம்பந்தபட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.எஸ்.பி., ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, உதவி ஆணையர் (கலால்) சிவா, ஆர்.டி.ஓ., அரிதாஸ், டாஸ்மாக் மேலாளர் முருகன் பங்கேற்றனர்.