நுரையீரல் தன்மையை அறியும் ஸ்மார்ட் மாஸ்க் கண்டுபிடிப்பு மயிலம் கல்லூரி மாணவர் சாதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
04:41

விழுப்புரம்-மயிலம் பொறியியல் கல்லுாரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை மூன்றாம் ஆண்டு மாணவர் ஸ்ரீநாத், நுரையீரல் தன்மையை தொலைவில் இருந்து அறிய ஸ்மார்ட் மாஸ்க் மற்றும் மைக் மாஸ்க் உருவாக்கியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:கொரோனா தொற்றால் மாஸ்க் அனைவரின் வாழ்விலும் முக்கியமானதாக மாறியுள்ளது. தொற்று உள்ளவரின் நுரையீரல் ஆரோக்கியம், ஆக்சிஜன் அளவை பற்றி அரிய ஸ்மார்ட் மாஸ்கையும், முகக்கவசம் அணிந்து பேசுவதைத் தெளிவாக கேட்க மைக் மாஸ்கையும் வடிவமைத்துள்ளேன்.ட்ரான்ஸ் மீட்டர் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் மாஸ்க்கை ஒருவர் அணிவதால் டாக்டர்கள் நுரையீரலின் கொள்ளளவு, நெஞ்சு இரைச்சல் மற்றும் அதன் தன்மையை நோயாளி அருகே செல்லாமலே 50 அடி தொலைவிலிருந்து நோய் தொற்று தன்மையை அறிய முடியும்.ஸ்மார்ட் மாஸ்க், மிக சிறிய கிராமத்தில் இருக்கும் நோயாளியின் சாதாரண 2ஜி அலைபேசியை வைத்தே நோய் தன்மையை கண்காணிக்கவும், சோதனைகளை எவ்வித செலவின்றி மேற்கொள்ளவும் முடியும்.சாதாரண முகக்கவசம் அணிந்து பேசுவோர், பேச்சு மற்றவருக்கு சரியாக கேட்பது இல்லை. மைக் மாஸ்க் அணிந்து மெதுவாக பேசினால் கூட 15 அடி தொலைவில் உள்ள ஒருவரால் தெளிவாக கேட்க முடியும்.இதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்கலாம். இந்த கருவியை எந்தவகை மாஸ்கிலும் எளிதாக இணைக்கலாம். சிரமமின்றி அணிய மிகச்சிறிய அளவிலும், குறைந்த எடையிலும், சிறிய பேட்டரிகளாலும் தடையின்றி 100 மணி நேரம் இயங்கும் வகையில் இக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த கருவி டாக்டர்கள், நிருபர்கள், கல்லுாரி, பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு மாணவர் ஸ்ரீநாத் கூறினார்.கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், கல்லுாரி தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், முதல்வர் செந்தில், டீன் ராஜப்பன், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறைத் தலைவர் கணேசன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பொறுப்பாளர் தனசேகரன் உட்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X