கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 1,661 வேட்பு மனுக்கள் பரிசீலனை | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 1,661 வேட்பு மனுக்கள் பரிசீலனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
04:43

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில், வேட்பு மனு தாக்கல் செய்த 1,661 மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு இரண்டாம் கட்டமாக வரும் 9 தேதி தேர்தல் நடக்கிறது. இதில், கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்திற்குட்பட்ட 2 மாவட்ட கவுன்சிலர்கள், 23 ஒன்றிய கவுன்சிலர்கள், 46 ஊராட்சித் தலைவர்கள், 375 கிராம வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. கடந்த 15ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதில், அரசியல் கட்சியினரின் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளாக கருதப்படும் மாவட்ட கவுன்சிலருக்கு 22 வேட்பு மனுக்கள், ஒன்றிய கவுன்சிலருக்கு 137 மனுக்கள் பெறப்பட்டன.அதேபோல், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 240 வேட்பு மனுக்கள், கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,262 மனுக்கள் என மொத்தம் 1,661 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. மனு தாக்கல் முடிந்து, நேற்று வேட்பு மனு பரிசீலனை நடந்தது.கள்ளக்குறிச்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடராஜன், தேவநாதன், மாதேஸ்வரன் ஆகியோரது தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒவ்வொரு ஒன்றிய வார்டுகள் மற்றும் ஊராட்சிகள் வாரியாக ஒலிப்பெருக்கி மூலம் அழைப்பு விடுத்து மனு தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களின் மனுக்களையும் பரிசீலனை செய்தனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X