ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3.34 லட்சம் பறிமுதல் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3.34 லட்சம் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
04:44

மரக்காணம்-மரக்காணம் அருகே ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 3.34 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மரக்காணம் அடுத்த அனுமந்தை சுங்கச்சாவடியில் தாசில்தார் கலா தலைமையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி 3 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் கொண்டு சென்றது தெரியவந்தது.உடன், அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, விசாரித்ததில், புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீதர், 47; என்பதும், ஹோம் அப்ளையன்சஸ் பொருட்களை வாங்கி விற்பனை செய்பவர் என தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மரக்காணம் தேர்தல் அலுவலர் ஜெகதீசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X