ராமநத்தம் பஞ்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் | கடலூர் செய்திகள் | Dinamalar
ராமநத்தம் பஞ்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
04:49

திட்டக்குடி--ராமநத்தம் ஊராட்சி 9வது வார்டை பொது வார்டாக மாற்றக் கோரி, அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடி அடுத்த ராமநத்தம் ஊராட்சிக்குட்பட்ட 9வது வார்டு, கடந்த 2019 உள்ளாட்சி தேர்தலின் போது தனி வார்டாக மாற்றப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 2019 உள்ளாட்சி தேர்தலில் யாரும் போட்டியிட வில்லை. காலியாக இருந்த வார்டு உறுப்பினர் பதவிக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு மூன்று பெண்கள் மனுத்தாக்கல் செய்தனர். 9வது வார்டை பொது வார்டாக மாற்றாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து, ராமநத்தம் ஊராட்சி அலுவலகம் முன்பு 9வது வார்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க முடிவெடுத்து கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X