தடையில்லா சான்று கோரி தர்ணா | கடலூர் செய்திகள் | Dinamalar
தடையில்லா சான்று கோரி தர்ணா
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
04:51

பெண்ணாடம்-பெண்ணாடம் கோவில் இடத்தில் குடியிருப்போர்கள் மின்இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்கக்கோரி, கோவில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கருங்குழி தோப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில் 7 குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு இல்லை. புதிதாக மின் இணைப்பு பெற கோவில் செயல் அலுவலர் கருணாகரனிடம் தடையில்லா சான்று கேட்டனர். அவர் மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று பகல் 11:00 மணியளவில் ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்க நிறுவனர் வழக்கறிஞர் பத்மநாபன் தலைமையில் பழைய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின், 11:30 மணியளவில் ஊர்வலமாகச் சென்று பிரளயகாலேஸ்வரர் கோவில் முன்பு தரையில் அமர்ந்து கோஷமிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் வந்து, அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதில், உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X