மதுரை : மதுரை வைகை ஆற்றில் பாலிதீன் பைகளில் குப்பை கொட்டுவதை தவிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
யானைக்கல் கல்பாலம் அருகே சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் தலைமையில் தன்னார்வலர்கள் ஆனந்தகுமார், கார்த்திக்ராஜா உள்ளிட்டோர் ஆற்றில் கிடந்த கழிவுகளை அகற்றி குப்பைதொட்டியில் கொட்டினர். குப்பை கொட்ட மாநகராட்சி சார்பில் ஆற்றோரம் தொட்டிகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.