மதுரை : மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பில் ஏற்றுமதி தொடர்பான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மடீட்சியாவில் நாளை (செப்.25) காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
புவிசார் குறியீடு பெற்ற மதுரை மல்லிகை, சுங்குடி சேலை தயாரிப்பாளர், ஏற்றுமதியாளர்களின் தயாரிப்புகள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. ரப்பர், உணவு, பிளாஸ்டிக் மற்றும் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வோர் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.ஏற்றுமதி சார்ந்த அரசு துறைகள், வங்கிகள், மாவட்ட தொழில் மைய நிர்வாகிகள் ஆலோசனை வழங்க உள்ளனர். ஏற்கனவே தொழில் செய்வோர், புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர் கருத்தரங்கில் பங்கேற்கலாம் என தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.