மதுரையில் பிச்சை எடுக்க பயன்படுத்திய 36 குழந்தைகள் மீட்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
04:59

மதுரை : மதுரை நகரில் 17 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் மேற்கொண்ட சோதனையில் பிச்சை எடுக்க பயன்படுத்திய 36 குழந்தைகள் மீட்கப்பட்டனர். பெற்றோரிடம் விசாரணை நடக்கிறது. இவர்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.


நகரில் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சிக்னலில் பச்சிளம் குழந்தையுடன் சிலர் பிச்சை எடுத்து வருகின்றனர். நேற்று ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா, குழந்தைகள் நல பாதுகாப்பு குழு உறுப்பினர் பாண்டியராஜா, ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜா உள்ளிட்டோர் ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் சோதனையிட்டனர்.



இதேபோல் 17 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு பிச்சை எடுக்க பயன்படுத்திய 19 பெண் குழந்தைகள், 17 ஆண் குழந்தைகளை மீட்டனர். பெற்றோர்கள் 10 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.



போலீசார் கூறியதாவது: கலெக்டர் அறிவுரைபடி நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் சக்கிமங்கலம், கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர்கள். சிலர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களின் இருப்பிடத்திற்கே சென்று குழந்தைகள் நலக்குழு மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்படும். மாவட்ட நிர்வாகம் மூலம் அவர்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.



அதேசமயம் பெற்றோர் கொடுத்த சில ஆவணங்கள் உண்மைதானா என விசாரித்து வருகிறோம். இதன்மூலம் அவர்களின் குழந்தைகள்தானா என உறுதி செய்யப்படும். சந்தேகம் ஏற்படும்பட்சத்தில் டி.என்.ஏ., உள்ளிட்ட பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படும் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X