வீழ்ச்சி; புரட்டாசி மாதத்தையொட்டி மீன்களின் விலை...வெறிச்சோடிய கடலூர் மார்க்கெட்டுகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
05:02

கடலுார்-புரட்டாசி மாதத்தையொட்டி, கடலுாரில் மீன்களின் விலை வீழ்ச்சி அடைந்துவாங்க ஆள் இல்லாமல், மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

க்ஷ


பெருமாளுக்கு உகந்தது புரட்டாசி மாதம். இம்மாதம் துவங்கியதுமே பெரும்பாலான இந்துக்கள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவர். இதனால் புரட்டாசி மாதம் முழுமையும் வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள். புரட்டாசி மாதத்தில் வெயிலும் காற்றும் குறைந்து மழை துவங்கும் என்பதால், பல மாதங்களாக, வெயிலால் சூடாகியிருந்த பூமி மழை நீரை ஈர்த்து, வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.



இதனால், உடல் சூடாகி உபாதைகள் ஏற்படும் என்பதால் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என, முன்னோர்கள் கூறினர்.அதையொட்டி புரட்டாசி மாதத்தில் இறைச்சி விற்பனை 'டல்' அடிப்பதுடன், விலையும் கடுமையாக குறைந்துவிடும். இந்த ஆண்டு கடலுாரில் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் கடலுார் முதுநகர், பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் விசைப்படகு மீன்பிடி துறைமுகங்கள், முடசல் ஓடை, சாமியார்பேட்டை, எம்.ஜி.ஆர்., திட்டு, பேட்டோடை பகுதிகளில் சிறிய மீன்பிடி தளங்களில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். மீன்களை ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.கடலுார் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று காலை மீனவர்கள் வலையில் ஏராளமான மீன்கள் சிக்கின. இதையடுத்து கரையில் மீன்களை ஏலம் விட்டனர். புரட்டாசி மாதம் என்பதால் மீன்களை ஏலம் எடுக்க நிறைய வியாபாரிகள் வரவில்லை. புரட்டாசி மாத விரதம் இருப்போரும் மீன்கள் வாங்க துறைமுகத்திற்கு வரவில்லை. இதனால் மீன்கள் விலை வீழ்ச்சியடைந்தது.ரூ.600க்கு விற்ற கொடுவா மீன் ரூ.300க்கும், கிலோ ரூ. 300க்கு விற்ற சங்கரா ரூ. 150க்கும், நண்டு ரூ.200க்கும், கனவா மீன் ரூ. 400ல் இருந்து ரூ. 150 ஆகவும், ரூ. 300க்கு விற்ற கானாங்கத்தை 100 ரூபாயை விட குறைவாகவும் விற்பனையானது. மேலும், 20 கிலோ எடை கொண்ட கவளை மீன் பாக்ஸ் ரூ. 900 இருந்து ரூ. 250 ஆக விலை வீழ்ச்சியடைந்தது. பாறை மீன் ரூ. 300ல் இருந்து ரூ. 150 ஆக குறைந்தது.



அதேபோன்று கிலி மீன், இறால், காரை உள்ளிட்ட மீன்களின் விலையும் பாதியாக வீழ்ச்சியடைந்தது. இதனால், மீனவர்கள் கவலை அடைந்தனர்.இதையடுத்து மீன்களை ஐஸ் பெட்டிகளில் பதப்படுத்தி கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பினர். இந்த ஒரு மாத காலம் மீன்கள் விலை சற்று குறைவாக தான் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது அதிகளவில் கிடைக்கும் நிலையில், புரட்டாசி மாதம் என்பதால் மீன்கள் விலை வீழ்ச்சியடைந்து, துறைமுகங்களில் உள்ளூர் வியாபாரிகள் கூட அதிகம் மீன்வாங்க வராமல் வெறிச்சோடியது. கடலுார் முதுநகர், திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடியதால் வியாபாரிகள் பாதித்துள்ளனர்.



அதே சமயத்தில் கோழி இறைச்சி விலை குறையாமல் கிலோ ரூ. 220க்கும், ஆட்டிறைச்சி ரூ. 750 முதல் ரூ. 800 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.கடந்த ஆண்டு விர்...கொரோனா பாதித்தவர்கள் மீண்டும் உடல் பழைய நிலைக்கு வருவதற்கு, புரோட்டின் உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற தகவல் பரவ, கடந்த ஆண்டு புரட்டாசி மாதத்தையே மறந்து பலரும் இறைச்சி கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால் மீன் மற்றும் இறைச்சி விலை குறையாமல் நாளுக்கு நாள் உயர்ந்தது. கோழி இறைச்சி ரூ. 220 வரையும், ஆட்டிறைச்சி விலை ரூ. 850 வரையும் விற்றது. முட்டை விலையும் கடந்த ஆண்டு ரூ. 5 க்கு விற்றது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X