கூட்டுறவுத்துறை மூலம் நெல் கொள்முதல் மையங்கள்; பெண்கள் சிறுதொழிலுக்கு 4 சதவீத வட்டியில் கடன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
05:02

மதுரை : கூட்டுறவு துறை மூலம் மதுரை, வாடிப்பட்டியில் நெல் கொள்முதல் மையங்கள் துவங்கப்படுவதாகவும் பெண்கள் சிறுதொழில் செய்வதற்கு 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுவதாகவும் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் எஸ். குருமூர்த்தி தெரிவித்தார்.அவரது பேட்டி:



 கூட்டுறவுத்துறையின் கீழ் எத்தனை ரேஷன் கடைகள் உள்ளன?



128 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 1091 முழுநேர ரேஷன் கடைகளும் 265 பகுதிநேர கடைகளும் செயல்படுகின்றன. 9 லட்சத்து 15 ஆயிரத்து 393 கார்டு தாரர்களுக்கான அரிசி, பருப்பு, சீனி, பாமாயில், கோதுமை வினியோகம் பயோமெட்ரிக் முறையில் செயல்படுத்துகிறோம்.



 ரேஷன் பொருட்கள் வாங்கும் போது மற்ற பொருட்களை வாங்க சொல்லி சில விற்பனையாளர்கள் கட்டாயப்படுத்துகின்றனரே?



ரேஷன் கடையை ஒட்டி சிறு கூட்டுறவு சிறப்பங்காடி நடத்துகிறோம். பெரிய கடைகளை விட குறைந்த விலையில் உப்பு, புளி மளிகைப் பொருட்களை விற்கிறோம். வாங்க வேண்டுமென்பது கட்டாயமில்லை. மற்ற கடைகளை விட தரம் நன்றாக இருக்கும், விலை குறைவாக இருக்கும்.



 கூட்டுறவு துறை மூலம் விவசாயிகளுக்காக யூரியா, டி.ஏ.பி. மற்ற உரங்கள் விற்கப்படுகின்றன. அவ்வப்போது யூரியாவுக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்படுகிறதே?



அரசு குறிப்பிட்ட மானிய விலையில் தடையின்றி இருப்புக்கு ஏற்ப யூரியா வழங்கப்படுகிறது. யூரியா மட்டுமின்றி டி.ஏ.பி. மற்ற உரங்களும் சரியான விலையில் விற்கப்படுகிறது.



 பொதுமக்களுக்கான மற்ற சேவைகள் என்னென்ன?



177 கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 140 இ-சேவை மையங்களை நடத்தி வருகிறோம். முதியோர் பென்சன், நேட்டிவிட்டி சான்றிதழ், திருமண உதவி திட்டம், முதல் பட்டதாரி சான்றிதழ், விவசாயிகளுக்கான பட்டா, சிட்டா அடங்கல் அனைத்துமே குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் இருப்பதால் கிராம மக்கள் சான்றிதழுக்காக ஒவ்வொரு அலுவலகமாக அலைவது குறைகிறது.



 கூட்டுறவு மருந்தகங்கள் குறைந்தளவே உள்ளது. ஐந்தாண்டுகளாக அதிகரிக்கப்படவில்லையே?



பேரையூர், டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, மேலுார், வாடிப்பட்டி, மாநகராட்சி பகுதிகளில் 20 மருந்தகங்கள் மூலம் 20 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்குகிறோம். கூடுதலாக 10 மருந்தகங்கள் திறக்க உள்ளோம். அதில் திருமங்கலம் மற்றும் மதுரை பி.ஆர்.சி. போக்குவரத்து தொழிலாளர் கூட்டுறவு பண்டக சாலையில் மருந்தகத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.



 கூட்டுறவு வங்கிகளின் மூலம் என்னென்ன கடன்கள் வழங்கப்படுகின்றன?



விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முதன்மையானது. மத்திய கால கடன்களாக கறவை மாடு, ஆடு வளர்ப்புக்கு 3 ஆண்டு கால கடன் வழங்குகிறோம். பெண்கள் சிறுதொழில் செய்ய ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையான கடனுக்கு 4 சதவீத வட்டியே வசூலிக்கிறோம். ஆண்களுக்கு 6 சதவீத வட்டி. இதன் மூலம் நிறைய பேர் பயன்பெறுகின்றனர்.



 நெல் கொள்முதல் மையங்கள் எப்போது செயல்பாட்டுக்கு வரும்?



தற்போது காரீப் பருவ சாகுபடிக்காக மதுரை (ஆரப்பாளையம்) மற்றும் வாடிப்பட்டியில் கூட்டுறவு விற்பனை சங்கம் தயாராக உள்ளது. கிராமப்புறங்களில் விளையும் நெல்லை அந்தந்த பகுதிகளிலேயே வாங்கி நுகர்பொருள் வாணிப கழகத்திடம் ஒப்படைக்க உள்ளோம். தாலுகா கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல் மையங்கள் செயல்படும். அடுத்ததாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கொள்முதல் மையங்கள் திறக்க உள்ளோம் என்றார்.



பயிர்க்கடன், சிறுதொழில் கடன், ரேஷன் கடை பிரச்னை, நெல் கொள்முதல் மையங்களில் தவறுகள் இருந்தால் 98840 00845ல் வாட்ஸ் அப் புகார் தெரிவிக்கலாம். ஒரு வாரத்திற்குள் குறைகள் தீர்க்கப்படும். இவ்வாறு கூறினார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X